Trending

அடையாளம் தெரியாத சன் டிவி பிரபலம் - அனிதா சம்பத்!

சன் டிவி-யில் தினமும் நீங்க பார்க்கிற முகம்தான். பார்த்தா, அடையாளம் தெரியுதா? இது இவங்களோட சின்ன வயதுப் படம்.

சன் டிவி பிரபலங்களில் ஒருவரான அனிதா, செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபுவுக்கு பிறகு நிறைய ரசிகர்களை கவர்ந்தவர். இவரை பார்ப்பதற்காகவே சன் நியூஸ் செய்தி சானலை மாற்றாமல் பார்த்தவர் பலர். எப்போதும் சிரித்த முகத்துடன்.. சின்ன பெண் போல காணப்பட்டாலும், நியூஸ் வாசிப்பு என்று வரும்போது தெளிவான உச்சரிப்பு… மற்றும் மெச்சூர்டான குரலில் செய்தி வாசிப்பு என்று பிச்சு உதறிவிடுவார் அனிதா. அது போல சன் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஐஸ்வர்யா, பார்வதி, இவர்களுடன் இவரும் அடிக்கடி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் பாலிமர் செய்தி சானல்தான் இவரை நியூஸ் ரீடராக அங்கீகரித்து அறிமுகம் செய்தது. இன்ஜினியரிங் படித்து முடித்து இருந்த அனிதாவுக்கு மீடியாவின் மீது தீராத மோகம் ஏற்பட்டு, செய்தி வாசிப்பாளராக மீடியா பயணத்தை துவங்கினார். பாலிமர் சானலுக்குப் பிறகு நியூஸ் 7 டிவியில் செய்தி வாசித்து வந்த அனிதாவுக்கு சன் நியூஸ் சானல் பெரும் ரசிகர் பட்டாளத்தையே பெற்றுத் தந்து இருக்கிறது.


Previous Post Next Post

Contact Form